பல்கலைக்கழகத்திற்கான பாட தெரிவுகளை மேற்கொள்வதிலும், Online விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதிலும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும்முகமாக கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் நேற்று (08.03.2020) கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலத்தில் 2019 இல் உயர்தரப்பரீட்சை எழுதி தற்பொழுது பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பத்தை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் கல்முனை,சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் உள்ள பல மாணவர்கள் பங்குபற்றி நன்மையடைந்தனர்.
இந்த நிகழ்விற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான FHA.Shibly அவர்கள் விரிவுரையாளராக கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு தேவையான சகல தகவல்களையும் வழங்கியிருந்தார். அவருக்கு கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பு சார்பாகவும், வந்திருந்த மாணவர்கள் சார்பாகவும் நன்றிகள். மேலும் பாடசாலை கட்டிடத்தை தந்து இந்த நிகழ்வை நடாத்த உதவிய பாடசாலை நிர்வாகத்திற்கும் நன்றிகள்.

No comments:
Post a Comment