Wednesday, March 11, 2020

தாண்டவமாடும் கொரோனா; ஒரே நாளில் 17 பேர் இறப்பு;

தாண்டவமாடும் கொரோனா; ஒரே நாளில் 17 பேர் இறப்பு;

* முதன் முறையாக வுஹான் வந்த சீன ஜனாதிபதி..!

வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகருக்கு, முதல்முறையாக சீன அதிபர் இன்று நேரில் வருகைதந்து, அங்கு இருக்கும் மக்களை சந்தித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகர் வுஹான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தொடங்கிய வைரஸ், தற்போது 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

சீனா மட்டுமில்லாது மற்ற பிற நாடுகளிலும் வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேபோகிறது.

சீனாவில் மட்டும் இதுவரை 80,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,136 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17,721 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும், 59,897 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், நேற்று முன் தினம் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தது சற்று பயத்தை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரத்துக்கு முதன்முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வருகை தந்துள்ளார்.

அதிபருடன் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர், மற்றும் பல அதிகாரிகளும் வந்துள்ளனர். வுஹானில் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தன் ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார் அதிபர்.

மேலும், அங்கு பணியில் இருக்கும் மருத்துவத் தொழிலாளர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள், சமூகத் தொழிலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், தொற்றுநோயை எதிர்த்துப் போராடியவர்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதையடுத்து, ஹூபே மாகாணத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து வைரஸ் நடவடிக்கைகள், மருத்துவர்கள், மக்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டார். வைரஸ் பரவத்தொடங்கியதிலிருந்து சீன அதிபர் இரண்டாவது முறையாக நாட்டு மக்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில், தினமும் 20-க்கும் அதிகமான புதிய வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவந்துள்ளனர். ஆனால், நேற்று அவர்களின் எண்ணிக்கை 20-க்கும் கீழ் இருப்பதாக சீனாவின் அரசு செய்தி ஊடகமான ஜின்ஹுவா தகவல் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 17 பேர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

@BBC

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...