Wednesday, March 11, 2020

கல்முனையின் காவலனாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளார் : மாநகரசபை உறுப்பினர் பைரூஸ் புகழாரம் !!

கல்முனையின் காவலனாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளார் : மாநகரசபை உறுப்பினர் பைரூஸ் புகழாரம் !!

கல்முனை மாநகருக்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகின்றதோ அப்போதெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சினையை முடிப்பதில் அல்லது தனிப்பதில் முன்றின்று செயற்படும் ஒருவராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் எங்களுடைய கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இருந்துவருவது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் சம்பந்தமான விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அவ்வறிக்கையில்.

கல்முனை மாநகரம் என்பது முஸ்லிங்களின் அடையாளங்களில் ஒன்றாகும். அவ்வடையாளத்தை சிதைக்க பல தீயசக்திகளினால் பல முன்னெடுப்புக்கள் கடந்தகாலங்களில் நடைபெற்றதை நாங்கள் எல்லோரும் அறிவோம். அப்போதெல்லாம் முஸ்லிங்களின் தேசிய இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் மறைந்த முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசறையில் பயின்ற எங்கள் மண்ணின் மண்ணின்  மகன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சிறப்பாக செயலாற்றி கல்முனையை பாதுகாப்பதில் முன்னின்று செயற்பட்டுள்ளதுடன் இனவாதம், பிரதேசவாதம் இல்லாது தன்னுடைய அமைச்சை கொண்டும் எங்களுடைய கட்சியின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சை கொண்டும் பல சேவைகளை எங்களுடைய மாவட்டத்தில் செய்துகாட்டியுள்ளார்.

நாட்டில் எங்கெல்லாம் முஸ்லிங்கள் நசுக்கப்பட்டு துன்பத்தை சந்திக்கின்றார்களோ அப்போதெல்லாம் பாராளுமன்றத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் குரல் ஓங்கி ஒலித்ததை நாங்கள் எல்லோரும் கண்டவர்கள். சிறந்த சமூக பற்றுள்ள எங்களுடைய ஆளுமையான மக்கள் பிரதிநிதியாக இருந்து பல சாதனைகளை செய்து காட்டிய சகோதரர் ஹரீஸ் அவர்களினது சேவையை மதித்து இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் மற்றுமின்றி அம்பாறை மாவட்ட கணிசமான முஸ்லிங்களும், தமிழ், சிங்கள  சகோதரர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், சகோதரர் ஹரீஸ் உட்பட ஏனைய  வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...