ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு கட்சிகளும் மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொடர்பில் இலங்கை அரசு மிக கடுமையாக கரிசனை செலுத்தி வருகிறது.
இதுவரைக்கும் உள்நாட்டிலுள்ள எவருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை, எனினும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரை மிக கச்சிதமாக 14 நாட்கள் வைத்து மருத்துவ பரிசோதனை வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இது போன்ற பொதுக்கூட்டங்கள் மூலம் கொரோனா பாதிப்புக்கள் ஏற்படுமா? அவ்வாறாயின் பொதுத்தேர்தலை சற்று பிற்போடுவதா என்பது பற்றி நாளை(11) தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் விசேட ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதில் பொதுத்தேர்தலை பிற்போடுவதா இல்லையா என்பது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு வெளியிடப்படுமென உள்ளக தகவல்கள்
#ஹஸ்மி#

No comments:
Post a Comment