Wednesday, March 11, 2020

ஆட்கொல்லி கொரோனா தொற்று காரணமாக குவைட் நாட்டில் இன்று(12) முதல் இரு வார காலங்களுக்கு பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆட்கொல்லி கொரோனா தொற்று காரணமாக குவைட் நாட்டில் இன்று(12) முதல் இரு வார காலங்களுக்கு பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக குவைத் அரசாங்கம் சம்பந்தபட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், மால்கள், சலூன்கள், உடற்பயிற்சி நிலையங்கள் என அனைத்திற்கும் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது.

கபினட் தீர்மானத்தின்படி மேற்படி பொது விடுமுறை அறிவிப்பை அடுத்து நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு சொசைட்டிகள், சிறிய/பெரிய சூப்பர் மார்கெட்டுகள், மால்கள் என அனைத்திலும் பொருட்கொள்வனவுக்காக கூட்டம் அலை மோதுகிறது.

ஒருவேளை உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்ற அட்சத்தால் கடைக்காரர் கேட்கும் தொகையை கொடுத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

எனினும் 4 மாத காலத்திற்கு தேவையான போதிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று அபாயம் காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து வணிக விமான போக்குவரத்துக்களையும் குவைட் அரசு இடைநிறுத்தி உள்ளது.

#ஹஸ்மி#

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...