Tuesday, April 21, 2020

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..



(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி.வனிகசிங்க இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.

இவர் இன்று  புதன்கிழமை (22-04-2020) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த வருடம் இலங்கை நிருவாக சேவை தரம் முன்று போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவு செயப்பட்டு நிருவாக சேவை அதிகாரியானார்.

அதன் பின்னர் கொழும்பில் ஒரு வருட பயிற்சியைப் பூரத்;தி செய்த பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1991.01.04ஆம் திகதி பிறந்த இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார்.

இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கற்று விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவப் பட்டதாரியாகி வருமான பரிசோதகராக பதவி பெற்றார்.

அதன் பின்னர் வருமானப் பரிசோதகர் பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தைப் பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் இராமகிருஷ்னன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய நிலையிலேயே இவர் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.

இவர் மருதமுனை மிமா சமூக சேவை அமைப்பின் உறுப்பினராக இருப்பதுடன் சமூக சேவையில் அதிக ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்றார்.

இவர் பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த அகமது சிராஜூதீன், ஜஃபுல் அறவியா தம்பதியின் புதல்வராவார்.

Monday, April 20, 2020

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சாய்ந்தமருதில் துஆ பிராத்தனை !!



நூருள் ஹுதா உமர்.

கடந்த ஆண்டு இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கான நினைவு துஆ பிராத்தனை நிகழ்வு இன்று (21.04.2020) காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ. ஆதாம்பாவா (ரஸாதி) அவர்கள் பிரதம உரையையும், துஆ பிராத்தனையையும் நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்  செயலாளர்,பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின்  தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவக் தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இத்தாக்குதல் நடைபெற்று சில தினங்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தீவிரவாத குழுவை பற்றிய தகவல்களை அப்பிரதேச மக்கள் பாதுகாப்பு படைக்கு வழங்கி நாட்டில் மற்றுமொரு தீவிரிவாத செயல் நடைபெறாமல் தடுத்திருந்தனர். அப்போது இலங்கை பாதுகாப்பு படைக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சாய்ந்தமருதை சேர்ந்த அப்பாவி இளம் பெண்ணொருவரும் பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நாளை(21)முதல் வியாபார நடவடிக்கைகள்


(சர்ஜுன் லாபீர்,யு.எல்.அலி. ஜமாயில்  , நூருள் ஹுதா உமர் )
                                                                          நாளை (21)செவ்வாய்கிழமையில் இருந்து கல்முனை பொதுச் சந்தையில் மரக்கறி சில்லறை வியாபாரங்கள் அனைத்தும் கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெறும் என்பதோடு மொத்த வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் கல்முனை பொதுச்சந்தையில் காலை 8 மணி வரைக்கும் நடைபெறும்.என இன்று கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீம் தலைமையில் இடம்பெற்ற விசேட உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை பொதுச் சந்தையில் வழமையாக மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட எந்தவொரு வியாபரியும் சில்லரை வியாபாரங்கள் மேற்கொள்ள முடியாது எனவும் தீர்மானிகப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுனன் உட்பட பொலிஸ் அதிகாரிகள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.என கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

Thursday, April 16, 2020

கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியைச் சேர்ந்த M.L.M. Sahee ( 21 வயது ) இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து பயிற்சியை முடித்துக் கொண்டு தற்போது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.


மனமார வாழ்த்துகின்றேன்

அல்ஹம்துலில்லாஹ்

எம் தாய் நாட்டின் பாதுகாப்பு துறையில் முஸ்லிம் சமூகம் சார்ந்தோர்களின் பாரிய பங்களிப்பு இந்த நாட்டுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் MLM . sahee என்பவர் இளம் வயதில் இத்துறையில் இணைந்திருப்பது விஷேடமாக அம்சமாகும்.

 இன்ஷா அல்லாஹ் மேற்படி துறையில் பல உயர் பதவிகள் வகித்து தான் சார்ந்த சமூகத்திற்கும் தாய் நாட்டிற்கும் நற்பெயரை பெற்றுத்தந்து சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் ஜலீல் ஓய்வு பதில் பணிப்பாளராக புவனேந்திரன் கடமை ஏற்பு

( யு.எல்.அலி. ஜமாயில். ).         
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் தற்காலிக பதில் கல்விப்பணிப்பாளராக  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் இன்று  (16) கடமை பொறுப்பேற்றார் . வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் நேற்று (15) ஓய்வு பெற்றதையடுத்து நிரந்தர வலயக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கும் வரை பதில் பணிப்பாளராக செயற்படும் வண்ணம்  பொறுப்புக்கள் கடமைகளை ஓய்வு பெற்ற  முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதிக்கல்வி பணிப்பாளர்   எஸ்.புவனேந்திரனிடம் கையளித்தார் .

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்  பணிப்பாளராக கடமையாற்றிய  காரைதீவை சேர்ந்த  எஸ்.புவனேந்திரன் கடந்த காலத்தில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 13, 2020

"கல்முனை பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களின் முன்மாதிரியான செயற்பாடு"



(நூருள் ஹுதா உமர்/ சர்ஜுன் லாபீர்)

அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் பட்டதாரி பயிலுனர்கள் அனைவரும் இணைந்து தங்களின் ஏப்ரல் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அசாதாரண சூழ்நிலையில் தொழில் ரீதியாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவும் நோக்கில் உலர் உணவுப்பொதிகள் வழங்கியுள்ளார்கள்.

இவ் உலர் உணவு பொதிகள் கல்முனை பிரதேச செயலக பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவ் பட்டதாரி பயிலுனர்கள் ஒற்றுமையுடனான சமூகம் சார்ந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் இவ்வாறு முன்னெடுத்து செல்லுவதற்கு பிரதேச மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.



கல்முனை முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஊடகவியளாலர்களுக்கான நிவாரணம்.

  (  யு.எல்.அலி. ஜமாயில்   )                                           சமாதான ஊடக அமைப்பு வேண்டுகளுக்கு இணங்க கல்முனை ஊடகவியளாலர்களுக்கான நிவாரணப் பொதி.                                                                  கல்முனை பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு  உலர்  உணவு  வழங்கியது
================================================
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரானா  வைரஸ்  தொற்று  அசாதாரண நிலைமையின் போது  ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின்  அடிப்படை வசதிகளை  கருத்தில் கொண்டு கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரால்  அப்பள்ளிவாசல்  பிரதேசத்துக்குள் வசிக்கும்  ஊடகவியலாளர்களுக்கு  அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை முகைதீன் ஜும்மா பெரியபள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்  தலைமையில்  நேற்று இரவு (12) பள்ளிவாசல் நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற  நிகழ்வில்  குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 10 ஊடகவியலாளர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது.














இந்த நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்  என்.எம்.நௌஸாத்  உட்பட நிருவாகிகளும் கலந்து கொண்டனர்

Saturday, April 11, 2020

( 11.04.2020 கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோடு கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் . இரண்டாம் கட்டமாக கல்முனை இஸ்லாமபாத் விட்டுத்திட்டத்தில் ஆரம்பித்து வைக்க பட்டுள்ளது.

(  11.04.2020          கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோ

கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் : கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று 11.04.2020 ஆரம்பித்துவைக்கப்பட்டது

கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் : கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று 11.04.2020 ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர்

எமது நாட்டில் பரவிவரும் கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோடு நாட்டின் பல பகுதிகளிலும் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரனையுடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ஜவாத் (ரஸாக்) அவர்களின் முயற்சியினால் தனது சொந்த நிதியின் பெறப்பட்ட கிறுமிநாசினிகள் தெளிக்கும் இயந்திரங்களை கொண்டு இவ்வேலைத்திட்டம் இன்று கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் பகுதியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார், உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் இன்னும் பல சமூக ஆர்வளர்களும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இவ்வேலைத்திட்டம் கல்முனையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.














தப்தர் ஜெய்லானி : தப்தர் ஜெய்லானி மலைக்குகைப் பள்ளிவாசலின் வரலாற்றுப் பின்னணி

தப்தர் ஜெய்லானி : தப்தர் ஜெய்லானி மலைக்குகைப் பள்ளிவாசலின் வரலாற்றுப் பின்னணி

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை

CURFEW ALERT :. ஏப்ரல் 14 ல் எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கு நீக்கப்பட மாட்டாது!‬

‪CURFEW ALERT‬
‪கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல்-16 காலை 6 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அதேநாள் பிற்பகல் 4 மணிக்கு அமுல் செய்யப்படும்.

NOTE:
ஏப்ரல் 14 ல் எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கு நீக்கப்பட மாட்டாது!‬

1377; O/L மாணவர்களுக்கு இலவச தொலைபேசி சேவை

1377; O/L மாணவர்களுக்கு இலவச தொலைபேசி சேவை

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் தனியான மையவாடி அமைத்து புதைக்க அனுமதிக்க வேண்டும் : ஏ. எல். எம். அதாவுல்லா.

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் தனியான மையவாடி அமைத்து புதைக்க அனுமதிக்க வேண்டும் : ஏ. எல். எம். அதாவுல்லா.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை தனியான மையவாடி ஒன்றை அமைத்து புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா யோசனை முன்வைத்துள்ளார்.ஆளும் கட்சி கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கொரோனா தொற்றினால்  உயிரிழக்கும்  முஸ்லிம்கள்  புதைக்கப்பட தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளதாக  அறிய  வருகிறது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் மண்ணின் தன்மை தொடர்பாக ஆராய்ந்து நிபுணத்துவ அறிவுரை வேலை பெற்று இந்தப் பிரச்சினைக்கு சாதகமான முடிவுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக அறியவருகிறது. ஆனால் அவரின் யோசனை தொடர்பில் சாதகமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.இலங்கை மத நம்பிக்கையுள்ள நாடு. எனவே கொரோனா தொற்று தொடர்பில் மத ஸ்தலங்களில் பிரார்த்தனைகள் புரிவதற்கு இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்,கொரோனா தொற்றினால்  இறப்பவர்களை அவர்களது மத நம்பிக்கைப் பிரகாரம் புதைப்பதற்கும்  அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

உயிரிழக்கும் நபர்களை  தகனம் செய்யவோ புதைக்கவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதே கருத்தை வெளியிட்டிருப்பது தொடர்பிலும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா தொற்றினால் உயிரிழக்கும்  நபர்களை புதைப்பதற்கு வேறு நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டது தொடர்பிலும் அவர் இங்கு விளக்கியதாக அறிய வருகிறது. ஆனால் நாட்டில் ஒரு சட்டமே முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் பிரகாரம் தகனம் செய்ய மட்டுமே அனுமதி  உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பதில் அளித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் சிரமம் !!

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் சிரமம் !!

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் தாங்கள் கடுமையான வாழ்வாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதாக குறித்த பட்டதாரி பயிலுனர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதுசம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபையில் கடந்த நல்லாட்சி அரசில் 21 பட்டதாரிகள், பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டு அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் 2020 ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்பட வில்லை. ஜனாதிபதியின் பணிப்புரையின் படி கொரோனா மற்றும் புதுவருட காரணங்களுக்காக ஏப்ரல் மாத சம்பளம் கடந்த 08ஆம் திகதிக்கு முன்னர் நாடுபூராகவும் வழங்கப்பட்டிருக்கின்றது. அம்பாறை மாவட்ட ஏனைய உள்ளுராட்சி மன்றங்களான அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை போன்ற அலுவலகங்களில் பணியாற்றும் தமது நண்பர்கள் இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகளை பெற்றுவிட்டதாகவும் தாங்கள் இதுவரை எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாமல் ஏமாற்றப்பட்டிருப்பது பாரிய மன உளைச்சலை உண்டாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அரச பணியாளர் என்பதனால் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்தவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் உதவித்தொகை கூட கிடைக்காமல் இருக்கிறது. எங்களுடைய குடும்பங்களை நடாத்தி செல்வதில் பாரிய செல்வாக்கை செலுத்தும் எங்களுடைய மாதாந்த கொடுப்பனவுகளை உடனடியாக எங்களுக்கு கிடைக்க கிழக்கு மாகாண சபை உயரதிகாரிகளும், கல்முனை மாநகர சபை கௌரவ முதல்வர், ஆணையாளர், கணக்காளர், உட்பட ஏனைய கௌரவ உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றனர்.

இன்றைய வீரகேசரி முதல் பக்கம் 11/04/2020

இன்றைய  வீரகேசரி  முதல் பக்கம் 11/04/2020

எஸ்.என்.ஹஸ்மி

இன்றைய தினக்குரல் முதல் பக்கம் 11/04/2020

இன்றைய  தினக்குரல்  முதல் பக்கம் 11/04/2020

எஸ்.என்.ஹஸ்மி

Friday, April 10, 2020

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் சிரமம் !!

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் தாங்கள் கடுமையான வாழ்வாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதாக குறித்த பட்டதாரி பயிலுனர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதுசம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபையில் கடந்த நல்லாட்சி அரசில் 21 பட்டதாரிகள், பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டு அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் 2020 ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்பட வில்லை. ஜனாதிபதியின் பணிப்புரையின் படி கொரோனா மற்றும் புதுவருட காரணங்களுக்காக ஏப்ரல் மாத சம்பளம் கடந்த 08ஆம் திகதிக்கு முன்னர் நாடுபூராகவும் வழங்கப்பட்டிருக்கின்றது. அம்பாறை மாவட்ட ஏனைய உள்ளுராட்சி மன்றங்களான அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை போன்ற அலுவலகங்களில் பணியாற்றும் தமது நண்பர்கள் இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகளை பெற்றுவிட்டதாகவும் தாங்கள் இதுவரை எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாமல் ஏமாற்றப்பட்டிருப்பது பாரிய மன உளைச்சலை உண்டாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அரச பணியாளர் என்பதனால் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்தவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் உதவித்தொகை கூட கிடைக்காமல் இருக்கிறது. எங்களுடைய குடும்பங்களை நடாத்தி செல்வதில் பாரிய செல்வாக்கை செலுத்தும் எங்களுடைய மாதாந்த கொடுப்பனவுகளை உடனடியாக எங்களுக்கு கிடைக்க கிழக்கு மாகாண சபை உயரதிகாரிகளும், கல்முனை மாநகர சபை கௌரவ முதல்வர், ஆணையாளர், கணக்காளர், உட்பட ஏனைய கௌரவ உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றனர்.

அரிசிக்கான விலை நிர்ணயம் விலை கூட்டி விற்கமுடியாது

அரிசிக்கான விலை நிர்ணயம் விலை கூட்டி விற்கமுடியாது
=========================================
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளை அரிசி, சிகப்பரிசி ஆகியவை 55 ரூபாவாகவும் நாட்டரிசி 90 ரூபாவாகவும் சம்பா, வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு கால் அழுத்துடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாய்

சகோதரர் Sowfath அவர்களுக்கு வாழ்த்துக்கள்
-
கொரோனா நோயில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

கால் அழுத்துடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாய்

கைகளை சுத்தம் செய்ய விஷேட தொழினுட்பங்களை பயன்படுத்தி இந்த   சாதனம்  உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அன்றாடம் ஒன்று கூடும் இடங்களில் தற்போது கைகளை கழுவும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மக்கள் குழாய்களை கைகளால்  திறந்து கை கழுவுகின்றனர் பின்னர் மூடும் போது குழாய்களில் (Tap )  அதே கிருமிகள் மீண்டும் கைகளை அடைகிறது. இதன் மூலம் கைகளினால் பரவும் கிருமிகளை தடுக்க கால்களின் அழுத்த  உதவியுடன் இயங்க கூடிய கை கழுவும் உபகரணம் ஒன்றை குறைந்த உற்பத்தி செலவில்  உருவாக்கப்பட்டுள்ளது

இவ் கண்டுபிடிப்பு  கால் இன்  சிறிய  அழுத்தம் மூலம் நீர்  மேலே  அனுப்பப்படுகிறது. கைகளை பயன்படுத்தி குழாயை (Tap) திறக்கதேவையில்லை.

இதன் பயன்பாடு
* உற்பத்தி செலவு குறைவு
* கைகளினால் பரவும் கிருமிகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது
*  இலகுவாக வேண்டிய இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்.
*சூரிய சக்தியின் மூலம்  இதற்கு  மின் வழங்கப்படுகிறது.
*நீர் இல்லாத போது நீரை இதில் சேமித்து வைக்க முடியும்.

Wednesday, April 8, 2020

(எம் எம் ஜெஸ்மமின்..) அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரபடகு உரிமையாளர்கள் மீனவர் கூட்டுறவு சங்த்தின் கல்முனைகுடி கிளையினால் கரையோர பிரதேச 500 வறிய. மக்களுக்கு உலர்உண வுப்பபொருட்கள்வழங்கி வைக்கப்பட்ன

(எம் எம்  ஜெஸ்மமின்..)
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரபடகு உரிமையாளர்கள் மீனவர் கூட்டுறவு  சங்த்தின் கல்முனைகுடி கிளையினால் கரையோர பிரதேச 500 வறிய. மக்களுக்கு உலர்உண வுப்பபொருட்கள்வழங்கி வைக்கப்பட்ன.இந் நிகழவில் கல்முனை பிரதேச செயளாலர் ஏ.எம்.நஸீர் வசதிகுறைந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார். ஊரங்கு உள்ள இக்காலகட்த்தில்  கஸ்டத்திலுல்ல மக்களுக்கு  இப் பொருட்களை  வினியோகித்தது  சிறந்த விடயமென பிதேச செயளாலர் கூறினார்






Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...