Wednesday, March 25, 2020

திருட்டு முயற்சி

திருட்டு முயற்சி

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் காரியால கதவின் பூட்டை உடைத்து திருடும் முயற்சி அயலவர்களின் உதவியினால் முறியடிக்கப்பட்டது.

இன்று (25) பிற்பகல் பாடலையினுள்ளிருந்து வழமைக்கு மாறாக வந்த சத்தத்தை அவதானித்த அயலவர்கள் குறித்த விடயம் தொடர்பாக அதிபருக்கு தெரியப்படுத்தினர்.

அதிபர், அபிவிருத்தி குழு அங்கத்தினர் மற்றும் அயலவர் துரிதமாக செயற்பட்டதன் காரணமாக திருட்டு முயற்சியை தடுக்கப்பட்டுள்ளது.

அதிபர் காரியாலத்தினுள் பாடசாலை ஆவணங்கள், கணனிகள் உள்ளிட்ட இலத்திரணியல் பெறுமதிமிக்க சாதனங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வலயக்கல்வி அலுவலர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அதிபரினல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்டுவரும் இக்கட்டான சூழலில் பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான ஈனத்தனமான திருட்டு முயற்சிகளுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அத்துடன் குறித்த பாடசாலைக்கு காவலாளி ஒருவரை வழங்கவும் சம்பந்தப்பட்டவார்கள் நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும்.

ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
2020.03.25



No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...