Saturday, March 28, 2020
#எம்_முன்னோர்_பட்டறிவிலும்_முன்னோரே..
#எம்_முன்னோர்_பட்டறிவிலும்_முன்னோரே.....
இலங்கையில் கிராமப் புறங்களில் தொற்று நோய் ஏற்பட்டால் குறிப்பாக "அம்மை" நோய் ஏற்பட்டால் பல நடை முறைகள் இருந்தன அவை விஞ்ஞான ரீதியாக நுண்ணியிர் கொல்லிகளோடு தொடர்பு பட்டிருந்தாலும் அங்கு மக்களில் கிராமத்து ஒழுக்கவியலுடன் (Rural Ethics)தொடர்பு பட்ட பண்பாகவும் காணப்பட்டது, அதன்படி வேப்பிலைகளை மருந்தாகப் பாவித்தல் , நோயாளியின் படுக்கையில் வேப்பிலைகளைப் பரவல், உடலில் தடவுதல் ,என பல விடயங்கள் இருந்தன,
அதில் முக்கியமானது, நோய்க்குள்ளான குடும்பத்தின் வீட்டு வாசலில் ஒரு பிடி வேப்பிலையைக் கட்டி தொங்க விட்டிருப்பர், இந்தச் செயல்... "குறித்த வீட்டில் தொற்று நோயாளி உள்ளார் என்பதும், அங்கு வருபவர்கள் உள்ளே வராமல் தம்மை வாசலோடு நிறுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுமாகும்"..., இது தொற்றுப் பரவலைத் தடுக்கப் பயன்பட்ட சிறந்த ஒரு முறை அத்துடன், தமது வீட்டில் நோய் உள்ளது என வெளிக்காட்ட அம்மக்கள் வெட்கப்படவும் இல்லை, ஏனையோரையும் துன்பத்திற்குள்ளாக்கவும் விரும்பவில்லை, உச்ச கட்ட சமூகப் பாதுகாப்பு முறை அங்கு நிலவியது
ஆனால் இந்த நவீன உலகில் தமக்கு தொற்று இருப்பதை அறிந்து, தனியே இருக்காமல் சுற்றுவதும், அதை வெளியே கூறப்பயப்படுவதும், ஏனையோருக்கும் பரவக் காரணமாக இருப்பதும் மிக மோசமான செயல் மட்டுமல்ல இன்றைய நாம் ,எமது சமூக ஒழுக்க பண்பாட்டில் பின்னடைந்துள்ளோமா? என்றே எண்ணத் தோன்றுகின்றது, எந்த விடயத்தை தோக்கினாலும் எம்முன்னோர் பலநூறு ஆண்டுகள் தாம் கற்றுக்கொண்ட பாடங்களையே எமக்கான பண்பாடாக விட்டுச் சென்றனர், நாகரீகம் என்ற நப்பாசையில் அவற்றைத் தூக்கி வீசியமையும் எமது இன்றைய அவலங்களுக்குக் காரணமாகும்..
உங்கள் பகுதிகளிலும் நோய்த்தொற்றுக் காலங்களில் பயன்படுத்திய கிராமிய நுட்பங்களை நீங்களும் பதிவிடலாம்.
முபிஸால் அபூபக்கர்
28:03:20

Friday, March 27, 2020
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! இத்தொடர் ஊரடங்கு சட்டத்தினை பயன்படுத்தி எமது அரசாங்கத்தினால் மேலும் ஒரு காரியத்தை செய்யவேண்டும்
. தற்போது நடைமுறையில் உள்ள 5000 ரூபாய் நாணயத்தாள்களை உடனடியாக அரசாங்கம் செல்லுபடியற்றதாக அறிவிக்க வேண்டும். அத்துடன் வங்கிகள் (ATM) ஊடாக புதிய நாணயத்தாள்களை மக்கள் பாவனைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை வேண்டிக் கொள்கிறேன்.
அஹமட் புர்க்கான்
கல்முனை
ஊரடங்கு சட்ட விதிமுறைகளை கடுமையான முறையில் பொலிஸ் மற்றும் முப்படையினர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஊரடங்கு சட்டத்தை பூர்த்தியாக பின்பற்றுவதுடன் வீதியில் நடமாடுவதை மக்கள் கைவிட வேண்டும் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு வலியுறுத்தல்
நண்பர்களே ! சமூக வலைதளங்களில் கண்டதையும் பகிர்வதை தவிர்த்து, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதை மட்டும் பகிர்ந்துகொள்வதானது முக்கியமான செய்திகளையும், தகவல்களையும் தவறவிடப்படும் சந்தர்ப்பத்தில் இருந்து அவர்களையும் உங்களையும் இவ் நெருக்கடியான சந்தர்பத்தில் பாதுகாக்க உதவலாம்.
எல்லோரும் பல மட்டங்களிலும் தொடர்பு உள்ளவர்கள்தான் ஆகவே நமக்கு கிடைக்கும் தகவல்கள் அவர்களையும் நமக்கு முதல் வந்தடைந்து இருக்கலாம், விஷேடமாக குழுமங்களில் ஒரே விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பகிரும் போது அக்குழுமமே வேண்டாம் என்கின்ற மனநிலை ஏற்படுகிறது.
ஆகவே பயனுள்ளதை பகிர்வோம் பயனடைவோம்,
பயனற்றதை தவிர்ப்போம்....!
பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று
பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று
================================================.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Mihraj News 24/7
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...
-
BREAKING: Saudi Arabia to temporary close schools and universities across the kingdom from Monday(9) until further notice as preventive ...
-
தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகைதருவோரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படுமென ...
-
வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை ========================================= கொரோனா வைரஸை நாட்டினுள் கட்ட...
-
கல்முனையில் கொரோனாவை தடுப்பதற்கான செயலணியின் தீர்மானங்கள் தொடர்பில் முதல்வரின் அவசர அறிவித்தல்..! ...
-
#PARLIMENT ELECTION எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டி !
-
கல்முனை முஸ்லிம் பிரதேசத்தில் 102 பேர் தனிமைப்படுத்தல் ___________________________________ கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முஸ...
-
பொருட் கொள்வனவிற்கு கல்முனையில் மக்கள் கூடுவது ஆபத்தானது ================================================= கல்முனை பிராந்திய சுகாதார ச...
-
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்) கல்முனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு அவசர செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று 2020.03.17 காலை பிரதேச செயலகத்தில் இ...
-
கல்முனையை ஒட்டுமொத்தமாக Lock Down செய்ய நேரிடும்....!!!! கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்கு பொது மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங...
-
(சர்ஜுன் லாபீர்,யு.எல்.அலி. ஜமாயில் , நூருள் ஹுதா உமர் ) நாளை ...