Wednesday, April 8, 2020

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொவிட்-19 (கொரோனா) தொற்றாளா் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொவிட்-19 (கொரோனா) தொற்றாளா் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இனியாவது,

1. இந்த தொற்றுநோயின் பாரதூரத்தை குறை
மதிப்பீடு செய்ய வேண்டாம்.

2.சுகாதார நடைமுறைகளைப் பேணிக் கொண்டு
வீட்டில் இருங்கள்

3.அத்தியாவசியமற்ற எக்காரணத்திற்காகவும்
வெளியில் வரவேண்டாம்.

4.வெளியில் வரும்போது சமூக இடைவெளியை
பேணுங்கள்.

5. பாதுகாப்பு படையினருக்கு நையாண்டி செய்கின்ற காவலித்தனமான நடவடிக்கைகளை தடுங்கள்

6 ஒரு பொிய முதலாளி, மண்வெட்டியைக் கட்டிக்
கொண்டு வெளியில் போவது போல - சலுகை
துஷ்பிரயோக வேலைகளைச் செய்ய வேண்டாம்.

7. ஒளித்துக் கொண்டிருக்கும்
வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் மற்றும்
தனிமைப்படுத்தப்படாதவா்களை காட்டிக்
கொடுங்கள்

8.கல்யாணம் முடிக்காத குமர் பிள்ளை -
கர்ப்பமடைந்தது போல இந்த நோயை மறைக்க
வேண்டியதில்லை. அறிகுறி தென்பட்டவா்கள்
முன்னுக்கு வாருங்கள்.

இதற்கப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை!!

- ஏ.எல்.நிப்றாஸ்
(ஊடகவியலாளா்)

UKயில் கொரோனா பரவுவதற்கு 5G அலைவரிசை காரணம் என தொலைபேசி கோபுரங்களை பொதுமக்கள் தீயிட்டுள்ளனர்!

UKயில் கொரோனா பரவுவதற்கு 5G அலைவரிசை காரணம் என தொலைபேசி கோபுரங்களை பொதுமக்கள் தீயிட்டுள்ளனர்!

கல்முனையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலை; மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் நடவடிக்கை..! (விலைப்பட்டியல் இணைப்பு)

கல்முனையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலை;  மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்  நடவடிக்கை..! (விலைப்பட்டியல் இணைப்பு)





பலாங்கொடைக்கு வருகை தந்த 640 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பலாங்கொடைக்கு வருகை தந்த 640 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Sunday, April 5, 2020

முகநூல் நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கு..!

முகநூல் நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கு..!
=============================================
இதை உங்களின் நண்பர்களின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள்.

கொரோனா வைரஸ் பரவுவது சம்பந்தமாக... இதை பரப்புவது இன்னார்... புலனாய்வுத் தகவல்கள் இப்படிச் சொல்கின்றன என்றெல்லாம் சமூக ஊடகங்களில் வரும் ஓடியோ க்ளிப்களை நீங்கள் இன்னுமொருவருக்கு அனுப்பாதீர்கள்...

அவை சம்பந்தமாக விசாரிக்கும் பொலிஸ் அதனை அனுப்பிய மூல நபரை கைது செய்வதுடன் அதனை போவர்ட் செய்தவர்களையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது..

இவ்வாறானவற்றை நாம் போவர்ட் செய்வதன் மூலம் அந்த வதந்திகளை பரப்ப நாமும் மறைமுகமாக உதவுகிறோம் என்று பொலிஸ் கூறுவதிலும் நியாயம் இல்லாமலில்லை...

புலனாய்வு அதிகாரி என்று கூறி அண்மையில் பரப்பப்பட்ட ஓடியோவின் சூத்திரதாரி சிக்கியுள்ளார்... அதனை பரப்பியவர்களும் விசாரணை வலைக்குள்...

எனவே அரச உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மட்டும் நம்புவோம்.. நண்பர்களுக்கு பகிர்வோம்..!

#கொரோனா_அற்ற_கல்முனை; கல்முனையில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்..!

#கொரோனா_அற்ற_கல்முனை;

கல்முனையில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்..!

நாளை திங்கட்கிழமை (06-04-2020) காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள நிலையில், இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாநகர சபை மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன் ஆகியோருடன் நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, பொது மக்கள் ஒன்றுகூடுவதை முடியுமானவரை கட்டுப்படுத்துவது குறித்தும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்துவது தொடர்பிலும் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது.

* இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த முறை போன்று பொதுச் சந்தைகளில் மொத்த வியாபாரம் மாத்திரம் இடம்பெறுவதுடன் பொது மக்களுக்கான மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் வியாபார நடவடிக்கைகள்  விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

* சந்தைகளின் நுழைவாயில்களிலும் கடைகளின் முன்னாலும் கை கழுவுவதற்கான அல்லது கிருமி தொற்று நீக்கும் (Sanitize) ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* மக்கள் மத்தியில் போதிய இடைவெளி பேணப்படுதல் வேண்டும் என்பதுடன் அனைவரும் மாஸ்க் அணிந்திருத்தல் அவசியம்.

* நுகர்வோர் மத்தியில் போதிய இடைவெளி இருப்பதை வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக உரிமையாளரினால் ஒரு பணியாளர் இக்கடமையில் அமர்த்தப்பட வேண்டும்.

* பொருள் கொள்வனவுக்காக சந்தை, கடைத்தெருக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மாத்திரமே செல்ல வேண்டும்.

* சமீப காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்தோர், சந்தைகள் மற்றும் கடைத் தெருக்களுக்கு செல்வதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

* பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீறப்படக்கூடாது என்பதுடன் விலைப்பட்டியல் அவசியம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

* மேற்படி ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக மாநகர சபை உத்தியோகத்தர்களுடன் பொலிஸ், இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப் படை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

* பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை மீறும் வியாபாரிகள் மீது அதே இடத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆகையினால், கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களும் பொது மக்களும் மேற்படி அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் அற்ற மாநகராக தொடர்ந்தும் பாதுகாப்பாய் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

-முதல்வர் ஊடகப் பிரிவு



Saturday, April 4, 2020

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நிர்ணய விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அரசாங்க அதிபர்!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நிர்ணய விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அரசாங்க அதிபர்!
---------------------------------------------------------------------------------------------------------

அம்பாரை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான நிர்ணய விலைகளை  அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்   அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலக  கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(4) நண்பகல் இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன்  ஏ.எம்.அப்துல் லத்தீப்  ஆகியோர் உட்பட  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக  புலனாய்வு உத்தியோகத்த
ர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கு விதித்த நிர்ணய விலை தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு  இம் மாவட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.

மேலும்  பிரத்தியேகமாக அமைககப்பட்ட சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மரக்கறி வகைகள் மீன்வகைகள் உள்ளிட்டவைகளுக்கு இந்நிர்ணயவிலை ஒன்றினை தீர்மானிப்பதற்காக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர  இந்நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யும் வர்த்க நிலையங்களை  சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அண்மைக்காலங்களாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சில வியாபாரிகள் எதுவித விலை நிர்ணயமும் இன்றி அதிகரித்த விலைகளுடன் நுகர்வோரை சிரமங்களுக்கு உள்ளாக்கி வருவதாக  பொது மக்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளில அததியாவசியப் பொருள்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தும்  முகமாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைவாக  மேற்படி  இந்நடவடிக்கைள் தேவையான   செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க உள்ளதாக  மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

-பாரூக் ஷிஹான்-




Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...